Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல-60 டைட்டில் இதுவா? இணையத்தை அதிர வைக்கும் செம்ம மாஸ் டைட்டில்

தல அஜித் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டார். அதிலும் விஸ்வாசம் படம் மெகா ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் வலிமை என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார், இந்த டைட்டில் இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

அதோடு வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என வி செண்டிமெண்ட்-யை மீண்டும் அஜித் பின்பற்றுகிறாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எது எப்படியோ உண்மை தகவல் படக்குழு அறிவித்தாலே தெரியும், அது மட்டுமின்றி இப்படத்தை பேன் இந்திய படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அப்படி இருக்கையில் ஏதாவது ஆங்கில வார்த்தை அல்லது ஹிரோவின் பெயரே டைட்டிலாக வைப்பார்கள், அப்படியிருக்க வலிமை சந்தேகம் தான் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது.