Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை 2019ல் வெளிவந்த படங்களின் தமிழகத்தின் மொத்த வசூல்! இத்தனை கோடிகளா? கோலிவுட்டின் அடுத்தக்கட்டம்

தமிழ் சினிமா மெல்ல பாலிவுட்டிற்கு நிகராக வளர்ந்து வருகின்றது. படங்களின் தரம் வைத்து பார்த்தால் பாலிவுட்டையே மிஞ்சும் நிலையில் தான் உள்ளது.

பாக்ஸ் ஆபிஸிலும் தற்போது அவர்களுக்கு போட்டியாக நாம் வளர்ந்து வருகின்றோம், இந்நிலையில் இந்த வருடம் இதுவரை பல படங்கள் திரைக்கு வந்துள்ளது.

இதில் குறிப்பிட்ட ஹிட் படங்கள் மற்றும் ரசிகர்களிடம் பேசப்பட்ட சில படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து தமிழகத்தில் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

இந்த வருடம் ஆரம்பத்திலேயே பேட்ட, விஸ்வாசம் சேர்த்து தமிழகத்தில் மட்டுமே ரூ 240 கோடி வசூலை கொடுத்தது, இது ஆல் டைம் ரெக்கார்ட் என்றே கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து வந்த தில்லுக்கு துட்டு-2 ரூ 18 கோடி, எல்.கே.ஜி ரூ 14 கோடி, தடம் ரூ 22 கோடி, காஞ்சனா3- ரூ 72 கோடி, நேர்கொண்ட பார்வை- ரூ 73 கோடி, கோமாளி- ரூ 42 கோடி, நம்ம வீட்டு பிள்ளை ரூ 60 கோடி, அசுரன் ரூ 40 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

இந்த படங்களில் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சூர்யாவின் என்.ஜி.கே, காப்பான் இரண்டு படங்கள் சேர்த்து ரூ 78 கோடிகள் வரை வசூல் வந்துள்ளது.

இதன் மூலம் இதுவரை 2019ல் வெளிவந்த படங்கள் அனைத்தையும் சேர்த்து பார்த்தால் தமிழக வசூல் மட்டுமே ரூ 700 கோடியை தாண்டும்.

மேலும், இன்னும் பிகில், எனை நோக்கி பாயும் தோட்டா, ஹீரோ, சூரரைப் போற்று ஆகிய படங்கள் வருவதால், கண்டிப்பாக இந்த வருடம் ரூ 900 கோடிக்கு மேல் தமிழக பாக்ஸ் ஆபிஸ் மட்டுமே இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.