Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த கட்டத்திற்கு தயாரான நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி- புதிய தகவல்

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, பின் பாடலாசிரியர் இப்போது தயாரிப்பாளராக வலம் வர இருக்கிறார்.

ரவுடி பிக்சர்ஸ் என விக்னேஷ் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்க இருக்கிறார். இதன் முதன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்க மிலன்ட் ராஜு இயக்குகிறார்.

இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துள்ளதாம். இதில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த அப்டேட் என்னவென்றால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.