Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் படத்தின் ஒன்-லைன் என்ன, வெளியான தகவல்- ஆர்வத்துடன் ஷேர் செய்யும் ரசிகர்கள்

பெரிய நடிகரின் படம் வருகிறது என்றாலே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும். அப்படி தான் விஜய்யின் பிகில் படத்திற்கு இருக்கு.

முதலில் ரிலீஸ் தேதி பிரச்சனை, கதை திருட்டு வழக்கு என அடுத்தடுத்து படம் குறித்து ஷாக்கான தகவல்கள் வந்தன. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது விஜய்யின் பிகில் படமும் தீபாவளிக்கு சரவெடி வெடிக்க இருக்கிறது.

தற்போது ஆன்-லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் வலைதளங்கள் அதிகம் உள்ளன. அதில் ஒன்றில் விஜய்யின் பிகில் படத்தின் கதை இதுதான் என பதிவு செய்துள்ளனர்.

கதை என்னவென்றால், பிகில் கால்பந்து பயிற்சியாளரின் கதை. இறந்துபோன தனது நண்பனின் கனவை நினைவாக்க கடுமையாக முயற்சி செய்கிறார், அதோடு அவர் இறப்பிற்கு காரணமானவரை பழிவாங்குகிறார், இதுவே கதை என போட்டுள்ளனர்.

இதுதான் கதை என்று வரும் தகவலை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.