Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய காரணத்தால் விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகையின் மகள்

பிகில் படம் விஜய்யின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஒரு படம். ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு அதிக பட்ஜெட்டில் அதாவது ரூ. 180 கோடிக்கு தயாராகியுள்ளது பிகில்.

இப்படி பட்ஜெட்டில் பெரிய அளவில் தயாராகியுள்ள இப்படம் வியாபாரத்திலும் பெரிதாக விலைபோனது. இப்படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்திருப்பவர் தேவதர்ஷினி.

நடிகையின் மகள் விஜய்யின் தீவிர ரசிகையாம், அவரும் ஒருநாள் படப்பிடிப்பிற்கு தளபதியை காண சென்றுள்ளார். அப்போது விஜய், தேவதர்ஷினியிடம் 96 படத்தில் உங்களது மகள் நடிப்பு சூப்பர் என்றாராம்.

உடனே நடிகை இதை அவளிடமே கூறுங்கள் என தனது மகளை அழைத்துள்ளார். இருவரும் 10 நிமிடம் பேசியுள்ளார்கள்.

மேலும் தேவதர்ஷினி, தனது மகள் பிகில் படத்தின் பெண்கள் அணியில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். அப்போது அவருக்கு 10ம் வகுப்பு தேர்வு இருந்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் தேவதர்ஷினி.