Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆந்திராவில் மாஸ் செய்யும் விஜய் பிகில்- தளபதிக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்

விஜய்யின் பிகில் படம் தான் தமிழ்நாடே எதிர்ப்பார்க்கும் ஒரு பெரிய படம். வரும் அக்டோபர் 25ம் தேதி படம் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

ப்ரீ பிசினஸில் மட்டும் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது. படத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பது இப்பட வியாபாரத்திலேயே அனைவருக்கும் புரிந்திருக்கும்.

தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும், இப்போது ஆந்திராவிலும் விஜய்க்கு பெரிய இடம் பிகில் படம் மூலம் கிடைத்துள்ளது.

அதாவது அங்கு ஆந்திரா-தெலுங்கானா என இரண்டையும் சேர்த்து விஜய்யின் பிகில் படம் 675 ஸ்கிரீன்களில் வெளியாக இருக்கிறதாம். நிசாம் பகுதியின் மட்டுமே 275 ஸ்கிரீன்களாம்.

இது தளபதிக்கு ஆந்திராவில் கிடைத்துள்ள மிகப் பெரிய ஓபனிங் என்கின்றனர்.