Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு இத்தனை தியேட்டர் இருந்தால் போதும்ங்க, கைதி தயாரிப்பாளரின் உறுதியான நம்பிக்கை

தமிழ் சினிமாவில் ஒரு சில தயாரிப்பாளர்கள் தான் காலம் கடந்தும் மக்கள் மனதில் நிற்பார்கள். அந்த வகையில் அருவி, ஜோக்கர் என்ற தரமான படங்களை தயாரித்தவர் எஸ்.ஆர்.பிரபு.

இவர் தயாரிப்பில் லோகேஷ் இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு கார்த்தி நடித்துள்ள கைதி படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்துடன் தளபதி விஜய்யின் பிரமாண்ட படமான பிகில் திரைக்கு வருவதால், இந்த படத்திற்கான திரையரங்கு கிடைக்குமா? என்று தயாரிப்பாளரிடம் கேட்டனர்.

அதற்கு அவர் கூலாக ‘எனக்கு தேவையான திரையரங்கு கிடைத்துவிட்டதுங்க, இந்த படம் 250 தியேட்டர்ல வந்தாலே போதும், நான் எதிர்ப்பார்த்த தியேட்டர் கிடைத்துவிட்டது’ என்று பதில் அளித்துள்ளார்.