Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் தமிழகத்திலேயே இத்தனை கோடி வசூல் செய்தால் தான் போட்ட பணமே வரும், பிரபல விநியோகஸ்தர் அதிரடி

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படம் வரும் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவவுள்ளது.

இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர், அப்படியிருக்க பிகில் படம் உலகம் முழுவதும் பிரமாண்ட தொகைக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் பிகில் படம் ரூ 83 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதை நாமே தெரிவித்து இருந்தோம்.

தற்போது பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணி பிகில் தமிழகத்தில் மட்டுமே ரூ 200 கோடி வசூல் செய்தாக வேண்டும்.

அப்போது தான் ரூ 150 கோடி நெட் வந்து, வரி அனைத்தும் போக எல்லோருக்குமான லாபமான படமாக அமையும் என கூறியுள்ளார்.