Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படம் திரையிட்டதால் சஸ்பென்ட் செய்யப்பட்ட நபர்- பரபரப்பில் மக்கள்

விஜய்யின் திரைப்பணத்தில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்று நண்பன். காமெடியாக செல்லும் அந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்த படத்தை திருக்கோவிலூர் அருகே சித்தேரிப்பட்டு என்ற ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்றில் சமீபத்தில் கணினித்திரை வைக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டது.

அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் எட்வர்ட் விக்டர்பாவு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு கணினித்துறையில் விஜய் நடித்த நண்பன் படத்தை திரையிட்டு காட்டியதாக புகார் வந்திருக்கிறது.

இதனால் கல்வி அலுவலகம் உடனே அவரை சஸ்பென்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த ஊர் மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.