Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகிலில் ராயப்பன் கெட்டப்பிற்கு மட்டும் விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?- பிரபலம் கூறிய தகவல்

விஜய்யின் பிகில் படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் உள்ளது. அன்றாடம் ஒவ்வொரு அப்டேட், பிரபலங்களின் பேட்டி என சமூக வலைதளங்கள் முழுவதும் பிகில் பேச்சு தான்.

இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பவர் ஜி.கே.விஷ்ணு. இவர் பிகில் படம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் பேசும்போது, எனக்கு பிடித்த கதாபாத்திரத்தில் விஜய்யின் ராயப்பன் லுக் தான் மிகவும் பிடிக்கும். அந்த லுக்கிற்காக மட்டும் விஜய் 25 மேக்கப் டெஸ்ட் போட்டாராம்.

அதில் அனைத்திலும் அவர் யங்காக இருந்ததாகவும் கடைசியாக ராயப்பன் லுக் தேர்வு செய்யப்பட்டதாக விஷ்ணு கூறியுள்ளார்.