தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது, அப்படியிருந்தும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் ‘ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து மட்டும் படம் எடுங்கள்’ என்று கேட்டார்.
அதற்கு அட்லீயும் ‘செஞ்சுட்டா போச்சு’ என்று பதில் அளிக்க, ரசிகர்கள் அனைவரும் பிகில்2 அப்போ ரெடியா என்று சந்தோஷமடைந்துள்ளனர்.