Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படம் 5வது நாளே படுத்துவிட்டது- புட்டுபுட்டு வைக்கும் பிரபலம்

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்கள் பிகில், கைதி. இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி அடுத்த 2 வாரங்கள் எந்த படமும் வெளியாகவில்லை.

இதனால் எந்தவித போட்டியும் இல்லாமல் இப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படங்களின் வசூல் நிலவரங்களை பற்றி மாற்றி மாற்றி பேட்டிகள் கொடுத்து வருகிறார் தயாரிப்பாளர் கே.ராஜன்.

அப்படி ஒரு பேட்டியில் பிகில் லாபம் தானே என்று கேட்டதற்கு, பிகில் படம் லாபம் என்று யார் கூறுகிறார்கள், தயாரிப்பாளர் தான் அந்த வலியை அனுபவித்து வருகிறார்.

பிகில் படம் 4 நாள் நன்றாக ஓடியது, ஆனால் 5வது நாள் படுத்துவிட்டது. இயக்குனர் இந்த படத்துக்காக அதிக செலவு செய்துவிட்டார், அவ்வளவு கலெக்ஷன் இல்லை.

விஜய்க்காக தான் ஓரளவு கலெக்ஷன் பெறுகிறது என்று பேசியுள்ளார்.