Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துருவ நட்சத்திரம் ட்ரைலரில் வரும் கனீர் வாய்ஸ் இவருடையது தானாம், பேசியவரே சொன்ன தகவல்

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதை கௌதம் மேனனே டுவிட்டரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் துருவ நட்சத்திரம் ட்ரைலரில் விக்ரமிடம் ஒருவர் பேசுவது போல் காட்டியிருப்பார்கள், ஆனால், வாய்ஸ் மட்டும் தான் வரும்.

ஆள் யார் என்று தெரியாது, அப்படியிருக்க, அவர் யார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அந்த ட்ரைலரில் பேசிய கனீர் வாய்ஸிற்கு சொந்தக்காரர் கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் தானாம்.

இதை இவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், இவரின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது குறிப்பிடத்தக்கது, அர்ஜுன் தாஸ் அடுத்து கும்கி-2வில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றாராம்.