Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆந்திராவில் படு மாஸ் காட்டும் கார்த்தியின் கைதி- முழு வசூல் விவரம் இதோ

இந்த வருட தீபாவளி அன்று இரண்டு படங்கள் வெளியானது, பிகில், கைதி. மக்கள் விஜய்யின் பிகில் படத்திற்கு பெரிய ஆதரவு அளிப்பார்கள் என்றனர், ஆனால் கைதி படத்தையும் விடவில்லை.

இரண்டு படங்களுமே தங்களது இடத்தில் செமயாக வசூல் மழை பொழிந்து வருகிறது. கைதி படம் ரிலீஸின் போது கணக்கிடப்பட்ட ஸ்கிரீன்களை விட இப்போது அதிகமாக ஸ்கிரீன்களில் வெளியாகியுள்ளதாக தயாரிப்பாளரே அறிவித்தார்.

பட வெற்றியை படக்குழுவினர் தமிழ்நாட்டில் கொண்டாடி வரும் நிலையில் ஆந்திராவிலும் கார்த்தியின் கைதி பட வசூலுக்கு எந்த குறையும் இல்லையாம்.

இரண்டு வார முடிவில் படம் அங்கு ரூ. 12.50 கோடி வசூலித்துள்ளதாம். 3வது வாரத்திலும் படத்திற்கு மக்களிடம் பெரிய பேச்சு இருப்பதாக கூறப்படுகிறது.