Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதி நேற்று வரை உலகம் முழுவதும் மொத்த வசூல்! கார்த்தி திரைப்பயணத்தில் ஆல்டைம் பெஸ்ட்

கைதி கார்த்தி நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்க, படமும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இதனால் முதல் வாரத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்த கைதி, இரண்டாம் வாரத்தில் பிகிலுக்கு இணையாக போட்டிக்கொடுக்க, மூன்றாவது வாரத்தில் பிகிலை விட அதிக வசூல் தந்தது.

இந்நிலையில் கைதி இந்தியாவில் மட்டும் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 95 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.

இவை தான் கார்த்தியின் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படமாம், அதோடு, விரைவில் ரூ 100 கோடி கிளப்பில் இணையவிருக்கும் கைதி, கார்த்தி திரைப்பயணத்தில் முதல் ரூ 100 கோடி படம் என்ற பெயரையும் பெரும்.