Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் வசூலை தொட இன்னும் பிகிலுக்கு இத்தனை கோடிகள் தான் தேவை!

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இந்த வருட பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் அஜித் திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்துள்ளது.

மேலும், தமிழ் சினிமாவிலேயே விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய லாபம் கொடுத்த படமாகவும் உள்ளது, இந்நிலையில் பிகில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது.

இப்படம் உலகம் முழுவதும் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டது, சுமார் ரூ 270 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டது, முழு வசூல் விவரத்தையும் விரைவில் பார்ப்போம்.

சரி தமிழகத்தில் பிகில் நிலை என்ன என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும், தமிழகத்தில் பிகில் ரூ 135 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

விஸ்வாசம் ரூ 126 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்ததாக கூறி வந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ரூ 140 கோடி விஸ்வாசம் வசூல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

அவர் சொன்னதுபடி பார்த்தால், இன்னும் ரூ 5 கோடியே விஸ்வாசம் வசூலை முறியடிக்க, பிகிலுக்கு தேவை என கூறப்படுகின்றது.