Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் முதலிடம் பிடித்த விஸ்வாசம் படம் செய்த சாதனைகள்- ஒரு பார்வை

சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக தயாராகி வெளியான படம் விஸ்வாசம். அப்பா-மகள் பாசம், குடும்பங்களின் முக்கியத்துவம் என இன்றைய கால மக்கள் மறந்த சில விஷயங்களை இப்படம் பேசியது.

பொதுவாக திரையரங்குகளுக்கு குடும்பங்கள் வருவது குறைந்துவிட்டது என்ற பேச்சு இருந்தது. அதை நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படம் முறியடித்தது. எந்த ஏரியா எடுத்தாலும் படத்தின் வசூலுக்கு குறைவே இல்லை, கூட்டம் அலைமோதுகிறது என்ற பேட்டிகள் தான் அதிகம் வந்தன.

ரஜினி என்ற பெரிய நடிகரின் பேட்ட படத்துடன் வெளியாகியும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. டுவிட்டரில் Most Influential Moments பட்டியலில் அஜித்தின் விஸ்வாசம் வர ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

  • தென்னிந்தியாவில் TRPயில் முதலிடம் உள்ள படம்
  • 2019ம் ஆண்டின் தமிழ்நாட்டில் அதிக லாபம் கொடுத்த படம்
  • 2019ம் ஆண்டின் நம்பர் 1 Influenced Tag

என பல பெருமைகள் படம் பெற்றுள்ளது.