தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக பிகில் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இதனால், படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைப்போட்டது, இப்படத்துடன் போட்டியாக கைதி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அப்படியிருந்தும் பிகில் நேற்று வரை ரூ 137 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இவை தமிழகத்தில் மட்டும் தான்.
உலகம் முழுவதும் பல இடங்களில் பிகில் பல கோடிகளை வசூல் செய்து பிரமாண்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
மேலும், விஜய் மெர்சல், சர்கார் தொடர்ந்து பிகில் மூலம் தொடர்ந்து மூன்று முறை ரூ 100 கோடி தமிழகத்தில் வசூல் கொடுத்த நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார்.