Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வட சென்னை 2 எப்போது?- இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களில் வெற்றிமாறன் ஒரு விதம். அவருடைய படங்களே அதற்கு உதாரணமாக இருக்கும்.

கடைசியாக அவரது இயக்கத்தில் வருடம் கழித்து வெளியான படம் அசுரன். இப்படத்திற்கு முன் அவர் இயக்கியது வட சென்னை.

இதில் தனுஷ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏகப்பட்ட கலைஞர்கள் நடித்தார்கள். படத்தை பார்த்து மக்களுக்கு பிடித்து போக இரண்டாம் பாகம் எப்போது என்று ரிலீஸ் அப்போதே கேட்டனர்.

இந்த நிலையில் வெற்றிமாறன் ஒரு பேட்டியில், வட சென்னை 2ம் பாகம் இன்றைய காலகட்டத்தில் இயக்குவது மிகவும் கஷ்டமான விஷயம். அதற்கு பட்ஜெட் அதிகமாகும், ஆனால் எதிர்காலத்தில் இயக்குவேன் என கூறியுள்ளார்.