Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகருக்கு இப்படி ஒரு திறமையா?- சிவகார்த்திகேயன் படத்தில் நடந்தது தெரியுமா?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா நடிகர்களில் நம்பிக்கை நட்சத்திரம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் நம்ம வீட்டுப் பிள்ளை.

இப்படம் அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் படமாக அமைந்தது, வசூலிலும் கலக்கியது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ஹீரோ என்ற படம் வெளியாகிறது. மித்ரன் இயக்கியிருக்கும் இப்படத்தின் முதல் பாடல் மால்தோ கித்தாபுள்ள அண்மையில் வெளியானது.

தற்போது பாடல் குறித்து சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் இந்த பாடலை பிரபல சீரியல் நடிகர் ஷ்யாம் தான் பாடியுள்ளாராம், அவரின் பாடல் திறமையை கேட்டு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மிகவும் பாராட்டியுள்ளாராம்.

ஷ்யாமின் மகள் ரக்ஷா இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.