Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ்-செல்வராகவன் படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- மாஸ் கூட்டணி

சினிமாவில் ஒரு சில நடிகர்கள் இவருடன் அடுத்தடுத்த படம் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவர்.

அப்படி தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் அடிக்கடி நடிக்க வேண்டும் என்றாலும் செல்வராகவன் கூட்டணியையும் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

தனுஷ் ரசிகர்கள் அப்படி ஒரு செய்திக்காக நீண்ட வருடங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். வருங்காலத்தில் இருவரும் இணைகிறார்கள் என்பது மட்டும் தெரியும், எப்போது, என்ன படம் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

இப்போது வந்த தகவல் என்னவென்றால் தனுஷ்-செல்வராகவன் இணையும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தானாம்.

இதுவரை படத்திற்கான இரண்டு பாடல்கள் இசையமைத்து முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.