Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தில் வடிவேலு இருக்கின்றாரா? வினோத்தே கூறிய தகவல் இதோ

தல அஜித் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வந்தது. இதில் நேர்கொண்ட பார்வை படத்தை வினோத் இயக்கியிருந்தார்.

இவர் தான் அஜித்தின் அடுத்தப்படத்தையும் இயக்கவுள்ளார், அப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் வினோத் உள்ளார்.

இந்நிலையில் வினோத்-அஜித் படத்தில் வடிவேலு உள்ளதாக பல செய்திகள் உலா வந்தது, நம் தளத்தில் கூட கூறியிருந்தோம்.

இதுக்குறித்து நடிகர் மனோபாலா, வினோத்திடம் போன் செய்து கேட்டாராம், அதற்கு வினோத் ‘சார் என் படமே சீரியஸான படம்.

இதில் வடிவேலு போல் ஒரு காமெடி நடிகரை எப்படி பயன்படுத்துவது, தற்போதைக்கு அஜித் மற்றும் சிறிய நடிகர்களே முடிவாகியுள்ளனர்’ என்று வினோத் கூறினாராம்.