கைதி கார்த்தி நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படத்தை மாநகரம் இயக்குனர் லோகேஷ் இயக்கியிருந்தார்.
இவர் தான் அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கைதி படம் உலகம் முழுவதும் ரூ 105 கோடி வசூல் செய்துவிட்டதாம்.
அதிலும் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 52 கோடிகள் வரை வசூல் செய்து கார்த்தி திரைப்பயணத்திலேயே அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரை பெற்றுள்ளது.
இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள் மட்டுமின்றி அதிக லாபம் கொடுத்த படமாக கைதி அமைந்துள்ளது.