பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ 290 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இன்று தகவல்கள் கிடைத்துள்ளது, அதிலும் வெளிநாடுகளில் மட்டுமே இப்படம் ரூ 90 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் மூலம் பிகில் ரஜினியின் எந்திரன் படத்தின் வசூலுக்கு இணையாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இன்னும் சில கோடிகள் வசூல் செய்தால் கண்டிப்பாக எந்திரன் வசூலை பிகில் முறியடிக்க வாய்ப்புள்ளது.