Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு ஆக்‌ஷன் சொன்னதும் ஒன்னு பண்ணுவாரு பாருங்க- பிரபல நடிகர் ஓபன் டாக்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் பிகிலை தொடர்ந்து தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் நடிகர் ஸ்ரீமன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், இவர் சங்கத்தமிழன் படத்திலும் நடித்துள்ளார்.

இதற்காக ஒரு பேட்டியில் விஜய் படம் குறித்து பேசினார், ஆனால், அதில் படத்தை பற்றி எதுவுமே கூறவில்லை.

படப்பிடிப்பில் விஜய் எப்படி என்று கூறியுள்ளார், அதில் ‘விஜய் நடனக்காட்சியை ஒருநாளும் ரிகர்சல் பார்த்தது இல்லை.

மாஸ்டர் ஆடும் போது பார்ப்பார், ஆக்‌ஷன் சொன்னதும் அவரிடமிருந்து ஒண்ணு வரும் பாருங்க, அவரை தவிர வேறு யாராலும் அதை பண்ண முடியாது’ என்று கூறியுள்ளார்.