இளம் யோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் கைதி. இந்த படம் ரிலீஸின் போது குறைவான திரையரங்குகளை பெற்றாலும் இப்போது அதிக திரையரங்குகளில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
பாடல்கள், காதல் காட்சிகள் என எதுவும் இல்லாமல் கதை மிகவும் விறுவிறுப்பாக செல்ல கூடியது. இதுவே படத்திற்க ஒரு ப்ளஸ்ஸாக அமைந்தது என்று கூட கூறலாம்.
வித்தியாசமான படங்களை கொடுத்த வேண்டும் என்று போராடும் கார்த்திக்கு இப்படம் பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
படம் வெளியாகி 25வது நாளை சாதனைகளோடு எட்டியுள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இப்படம் மூலம் தனது திரைப்பயணத்தில் ரூ. 100 கோடி வசூல் சாதனையை முதன்முதலாக பெற்றுள்ளார் நடிகர் கார்த்தி.