விஜய் பிகில் படத்தை முடித்த கையோடு தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.
கைதி என்ற வித்தியாசமான படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார்.
சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததையடுத்து டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.
இதில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் ஷாந்தனு டுவிட்டரில், லோகேஷ் கனகராஜுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு அமைதியாக இருங்கள், லோகேஷை நம்புங்கள் என நெருப்பு ஸ்மைலியோடு தெறிக்கும் டுவிட் போட்டுள்ளார்.
இதைப்பார்க்கும் போது தளபதி 64 படு மாஸாக தயாராகி வருவது தெரிகிறது.
Keep Calm and Trust Lokesh🔥😉#Thalapathy64 @Dir_Lokesh pic.twitter.com/OwWTYdDNo7
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) November 16, 2019