சூப்பர்ஸ்டார் ரஜினி-நயன்தாரா நடித்துள்ள தர்பார் படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ரிலீஸ் தேதி எதுவாக இருக்கும் என்பது இன்னும் படக்குழு சொல்லவில்லை.
பொங்கலுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை என்பதால் தர்பார் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் படத்தினை ஜனவரி 9ம் தேதியே வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. ஜனவரி 9ம் தேதி வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாதம் 7ம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.