தமிழ் சினிமா இந்த வருட ஆரம்பத்திலேயே மிகப்பெரிய ஹிட் படங்களை பார்த்துவிட்டது. அதை தொடர்ந்து பல ஹிட் படங்கள் இந்த வருடம் வெளிவந்தது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில வருடங்களில் இந்த வருடம் தான் அதிக ஹிட் படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வாரம் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆக்ஷன், சங்கத்தமிழன் ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவிற்கு போகவில்லையாம்.
அதிலும் சங்கத்தமிழன் சனி, ஞாயிற்கு நன்றாக போனது, ஆக்ஷன் அதுக்கூட இல்லை, இதனால், இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் பெரியளவில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.