Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் உண்மையான நிலவரம் என்ன, பிரபல தயாரிப்பாளரிடம் சொன்ன விநியோகஸ்தர்

பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.

இப்படம் அதிக தொகை கொடுத்து பலரும் வாங்கியதால், பெரியளவில் நஷ்டம் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், படம் போட்ட பணத்தை எடுத்துவிட்டது, இதுக்குறித்து தயாரிப்பாளர் ராஜன் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

ராஜான், மதுரை, செங்கல்பட்டு விநியோகஸ்தர் ஒருவரிடம், ‘என்னப்பா பணம் ஏதும் லாபம் கிடைத்ததா, பிகில் மூலம்?’ என கேட்டாராம்.

அதற்கு அவர் ‘போட்ட பணம் கைக்கு வந்துருச்சு, ஆனால், வட்டி கட்ட பணமில்லை’ என்று பதில் அளித்தாராம். அதாவது, பிகில் யாருக்கும் தமிழகத்தில் லாபம் தரவில்லை, போட்ட பணம் மட்டுமே கைக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.