விஜய்யின் பிகில் கடந்த சில வாரங்களில் படு வசூல் சாதனை செய்த படம். இதன் வசூல் சாதனையால் பல இடங்களில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்டில் மாற்றங்கள் ஏற்பட்டது.
ரூ. 180 கோடி பட்ஜெட்டில் தயாராகி ரூ. 300 கோடியை நெருங்க இருக்கிறது. வெளிநாட்டில் சில இடங்களில் வெற்றி காணவில்லை என்றாலும் இங்கு நல்ல லாபத்தை படம் கொடுத்துள்ளது.
இப்படங்களின் வசூல் சாதனைகளை நமது சினிஉலகம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் அதிகம் வசூலித்த படங்களில் பிகில் டாப் இடத்தில் உள்ளது, அதேபோல் ரூ. 80 கோடிக்கு மேல் திரையரங்க ஷேரும் பெற்றுள்ளதாம். அதிகம் வசூல், ஷேர் இரண்டிலும் பிகில் சாதனை செய்து ஆல் டைம் டாப் கோலிவுட் லிஸ்டில் உள்ளதாம்.
இது பிகில் படத்தின் சாதனையாகும்.