விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை மொத்த வசூலையும் ஒரே படத்தில் கடந்த தளபதி, பிகில் ஆட்சி
திரைப்படம் by Tony
தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் பிகில் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிகில் தற்போது வரை ரூ 298 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது, ஒரு சில பாக்ஸ் ஆபிஸ் தரப்பு ரூ 300 கோடியை எட்டியதாகவும் கூறுகின்றனர்.
தற்போது பிகில் இந்த வருடம் வெளிவந்த அஜித்தின் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் இரண்டு படங்களின் மொத்த வசூலையும் கடந்துள்ளது.
ஆம், இந்த இரண்டு படங்கள் சேர்த்து ரூ 290 கோடி வசூல் செய்ய, இதை பிகில் முறியடித்துள்ளது.