Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யாவின் அடுத்தப்படம், இது புதிய கூட்டணி- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

NGK பட வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா சூரரை போற்று படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சூர்யா அடுத்தப்படியாக சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலா, வெற்றிமாறன், கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ், ஹரி ஆகியோருடன் சூர்யா அடுத்து இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த வரிசையில் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரசிக்குமார் இணைந்துள்ளார்.

எஸ்.ஆர். பிரபு இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.