Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேவலமாக ட்ரெண்ட் செய்யும் விஜய், அஜித் ரசிகர்களே நீங்கள் இந்த படத்தை பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்கள் ரசிகர்கள் எப்போதும் இணையத்தில் ஏதாவது ட்ரெண்ட் செய்து கொண்டு இருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் இவர் நெகட்டிவ் டேக் என்று கூட செல்லும், அந்த வகையில் நேற்று விஜய், அஜித் ரசிகர்கள் மிகவும் கேவலமான வார்த்தைகள் மூலம் ட்ரெண்ட் செய்தனர்.

நடிகைகள் டாப்ஸி மற்றும் ஒரு சில பிரபலங்கள் கூட இதை பார்த்து தலையில் அடித்துக்கொண்டனர், அதில் குறிப்பாக பெண்களின் உடையை குறித்து குறைவாக பேசி ட்ரெண்ட் செய்தனர்.

இவர்கள் அனைவருமே சமீபத்தில் திரைக்கு வந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை பார்த்தார்களா? என்று தெரியவில்லை. அதில் ஒரு காட்சியில் ஜிவியை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சித்தார்த் நைட்டியை அணிந்து கூட்டி வருவார்.

ஒருகட்டத்தில் சித்தார்த் அம்மாவே ‘ஏண்டா நாங்களும் தான் ஆண்கள் உடையை அணிகிறோம், அதில் எந்த உறுத்தலும் இல்லை, ஆனால், பெண்கள் உடை என்றால் உங்களுக்கு அவமானப்படுத்துவதாக உள்ளதா, முதலில் நீ திருந்து’ என்பார், அது தான் நேற்று ட்ரெண்ட் செய்தவர்களுக்கான பதிலும்.