தமிழ் சினிமாவின் வளர்ச்சி மற்ற மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த வகையில் கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.
இந்நிலையில் பிகில் படம் கேரளாவில் மட்டும் ரூ 20 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.
அதோடு இந்த வருடம் வெளிவந்த மலையாள படங்களில் கேரளாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்ட் எடுத்தால், அதில் லூசிபர் மற்றும் மதுரராஜா படம் முதல் இரண்டு இடத்தில் இருக்கின்றது.
அதை தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் பிகில் படம் இடம்பெற்றுள்ளது, நிவின்பாலி, துல்கர் போன்ற மலையாள நடிகர்கள் படங்கள் கூட விஜய் படங்களுக்கு பின் தான் உள்ளது.