Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதி படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா?

கைதி இந்த வருடத்தின் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகின்றது. கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வந்தது.

இப்படம் திரைக்கு வந்த நாளில் இருந்து இன்று வரை பல திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது, இந்நிலையில் கைதி படத்தின் டிஜிட்டல் ஒளிப்பரப்பு ஒன்று வெளிவந்துள்ளது.

இது பல திரையரங்க உரிமையாளர்களுக்கு அப்செட் என்றாலும், இதன் டிஜிட்டல் ரைட்ஸ் சுமார் ரூ 10 கோடி வரை சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இவ்வளவு பெரிய வெற்றியடைந்த படம் இத்தனை குறுகிய நாட்களில் டிஜிட்டல் தளத்தில் வந்தது பலருக்கும் ஆச்சரியம் தான்.