Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெறித்தனம் பாடலை பின்னுக்கு தள்ளவிருக்கும் சும்மா கிழி, தர்பார் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று வெளிவந்தது, இவை பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

அந்த வகையில் இந்த சும்மா கிழி பாடல் தற்போது வரை 5.5 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது.

இன்னும் சில மணி நேரத்தில் வெறித்தனம் பாடலின் சாதனையை சும்மா கிழி முறியடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.