விஜய்யின் பிகில் படம் இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் ஒன்று. பட பட்ஜெட்டும் அதிகம் தான், ரூ. 180 கோடி செலவில் தயாரானது.
படம் ரூ. 250 கோடியை எட்டிவிட்டது, ரசிகர்களும் படத்தை ஏகபோகமாக கொண்டாடிவிட்டனர். ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தது, இதுவே பட வசூலுக்கு கொஞ்சம் பிரச்சனையாகவும் அமைந்தது என்று கூறலாம்.
25வது நாளை தாண்டி படம் பல இடங்களில் திரையரங்கம் புல்லாக ஓடுகிறது. 50 நாளை படம் எட்டிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரசிகர்களுக்கு பிரபலம் ஒருவர் ஹிண்ட் ஒன்று கொடுத்துள்ளார்.
அதாவது பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ரேவந்த் பிகில் 50 நாள் கொண்டாட்டம் குறித்து டுவிட் போட்டுள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அவர் அப்படி போட்ட டுவிட் பிகில் பற்றி தானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
B50ARO15
— Rhevanth Charan (@rhevanth95) December 1, 2019
Decode !!!