Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர் தானாம்!

தமிழ் சினிமாவிற்கு பல க்ளாஸ் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். இவருடைய படங்களுக்கு என்று ஒரு ஆடியன்ஸ் எப்போதும் இருப்பார்கள்.

அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்த வாரம் எனை நோக்கி பாயும் தோட்டா படம் திரைக்கு வந்தது, இப்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கௌதம் மேனன், பல மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

அதில் குறிப்பாக மின்னலே படத்திற்கு முதலில் மாதவன் கதாபாத்திரத்திற்கு அப்பாஸை தான் முடிவு செய்திருந்தேன், அவரும் எனக்காக இரண்டு தயாரிப்பாளர்களிடம் பேசினார்’ என கூறியுள்ளார்.