Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பட டயலாக்ஸை எப்படி மனப்பாடம் செய்வார்- நேரில் வியந்து பார்த்த பிரபலத்தின் ஓபன் டாக்

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். இவரது படங்கள் அடுத்தடுத்து வரும் புதிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வளர்ச்சியை கண்டு வருகின்றன.

படத்துக்கு படம் சாதனைகள் செய்கிறது அவரது படங்கள். இப்போது அவர் நடித்துவரும் 64வது படத்தில் நடனம் ஆடுபவராக சென்று இப்போது அப்படத்திலேயே நடிகராகியிருக்கிறார் டான்சர் விக்கி.

இதுபற்றி அவர் ஒரு பேட்டியில், நான் விஜய்யின் 64வது படத்தில் நடனம் ஆட தான் சென்றேன். அப்போது என்னுடன் இருந்த ஒரு நடனம் ஆடுபவரை படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கேட்டதாக கேள்விப்பட்டேன்.

திடீரென்று அவர் என்னிடம் வந்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். விஜய் படத்தில் முடியாது என்று கூற முடியுமே நடிக்கிறேன் என்று சொன்னேன்.

விஜய் அவர்கள் படப்பிடிப்பில் டயலாக்ஸை அப்படியே பல்லைக் கடித்துக் கொண்டே மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பேசி முடித்துவிடுகிறார். அதைப்பார்த்து வியந்துவிட்டேன் என பேட்டி கொடுத்துள்ளார்.