Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் தனுஷ் படத்தில் கலக்கப்போவது யாரு பிரபலம், யார் தெரியுமா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான், கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சி மூலமாக தான் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் போன்றவர்கள் திரையுலகிற்கு அறிமுகமானார்கள்.

மேலும், தற்போது நடிகர் தனுஷ் அசுரன் படத்திற்கு பிறகு, துரைசெந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

அண்மையில் கூட இப்படத்தின் சிங்கிள் ட்ராக் 'chill bro' என்ற பாடல் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் கலக்கப்போவது யாரு பிரபலம் சதீஷ் துணை நடிகராக நடித்து வருகிறார். இதுவே இவரது முதல் தமிழ் திரையுலகின் அறிமுக படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.