Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சுதந்திர போராட்ட வீரர்களின் கனெக்ஷனில் விஜய் 64வது படம்- சிறப்பு தகவல்

விஜய்யின் 64வது படத்தை லோகேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் வேலைகள் தளபதியின் பிகில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தொடங்கிவிட்டது.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றும் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. சென்னையில் 3ம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது, அதைத் தொடர்ந்து படக்குழு கர்நாடகா செல்ல இருக்கின்றனர்.

அங்கு எந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்கிறது என்ற சின்ன தகவல் வந்துள்ளது. அதாவது கர்நாடகாவில் ஷிவமொக்கா என்ற ஷிமோகா என்ற சிறையில் தான் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.

1897ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட சிறை, இந்தியாவின் பழமையான சிறைகளில் ஒன்று. பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதில் தான் வரும் டிசம்பர் 18ம் தேதி வரை படப்பிடிப்பு நடக்கிறதாம்.