Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 65 படத்தின் இயக்குனரும் இவர் தானா? செய்தியை கசியவிட்ட பிரபல நடிகர்

தளபதி விஜய் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்துவிட்டது.

ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர், ஏனெனில் இதற்கு முன்பு லோகேஷ் இயக்கத்தில் வந்த கைதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் தளபதி 65 படத்தின் இயக்குனரும் லோகேஷ் தான், அதனால் அந்த படத்தில் கண்டிப்பாக எனக்கு ஒரு சான்ஸ் கேட்பேன் என்று முனிஷ்காந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதன் மூலம் அடுத்தப்படமும் லோகேஷ் தானா? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.