Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகரிடம் கதை சொன்ன வெற்றிமாறன், ரசிகர்கள் செம்ம சந்தோஷம், இது மட்டும் நடந்தால்!

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் விருது மட்டுமின்றி கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றது.

இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது யாரை வைத்து படம் இயக்குவார் என்று பெரிய விவாதமே நடந்து வருகின்றது.

அந்த வகையில் சூர்யா, சூரி என பல பெயர்கள் அடிப்பட, இப்போது ஒரு செய்தி இணையத்தையே அதிர வைத்துள்ளது.

அது வேறு ஒன்றுமில்லை வெற்றிமாறன் தளபதி விஜய்யிடம் ஒரு கதை சொன்னதாக தகவல்கள் வெளிவந்துள்ளது, இது கூட்டணி மட்டும் நடந்தால் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்.