Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வரலாறு காணாத தோல்வி, பானிபட் நஷ்டம் மட்டும் இத்தனை கோடிகளா?

பாலிவுட்டில் எப்போதும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள படங்கள் வந்து செல்லும். இதில் ஒரு சில படங்கள் மிகப்பெரும் வசூல் சாதனை செய்யும்.

ஒரு சில படங்கள் பெரியளவில் வசூல் செய்யாமல் தோல்வியை தழுவும், ஆனால், சமீபத்தில் ரிலிஸான பானிபட் படம் மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்துள்ளது.

சுமார் ரூ 100 கோடி தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரையே ரூ 35 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், இதில் ஷேர் என்று பார்த்தால் ரூ 28 கோடி தானாம்.

இதன் மூலம் இப்படம் இந்தியாவில் மட்டுமே சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.