Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

100 கோடி ரூபாய் வசூல் செய்த ஒத்த செருப்பு, நம்புவீர்களா? உண்மை தான், இதோ விவரம்

பார்த்திபன் எப்போதும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுத்து வருபவர். தான் என்ன கமர்ஷியல் படங்களில் நடித்தாலும், இவர் எடுக்கும் படங்கள் தரமாகவே இருக்கும்.

அந்த வகையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, விமர்சன ரீதியாக பலரும் புகழ்ந்தனர்.

இந்நிலையில் பார்த்திபன் ஒரு பேட்டியில் ‘ஒத்த செருப்பு படம் தியேட்டரில் ஓடியதை விட நெட்ப்ளிக்‌ஷில் வந்த பிறகு தான் இதை உலகம் முழுவதும் பார்த்தனர்.

அதுவும் சுமார் ரூ 100 கோடி வசூல் அளவிற்கு இப்படத்தை நெட்ப்ளிக்‌ஷில் பார்த்து ரசித்துள்ளார்கள்’ என அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.