Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் தர்பார் படத்தை பிரபல திரையரங்கில் பார்த்த தனுஷ்- சென்னையில் இல்லை, எங்கே தெரியுமா?

ரஜினியின் தர்பார் படம் நேற்று (ஜனவரி 9) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. படத்தை ரசிகர்கள் ஏகபோகமாக கொண்டாடி வருகிறார்கள்.

படம் முதல் நாளில் சென்னையில் ரூ. 2.27 கோடி வரை வசூலித்துள்ளது, ஆனால் இது விஜய்யின் சர்கார் முதல் நாள் வசூலை விட குறைவு.

ரசிகர்களை போல ரஜினியின் குடும்பத்தினர் முதல் நாள் முதல் ஷோவை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் பார்த்தார்கள், அந்த புகைப்படங்களை நாம் பார்த்தோம்.

தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தனுஷ் ரஜினியின் தர்பார் படத்தை பிரபல ராம் முத்துராம் சினிமாஸில் இரவு பார்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.