Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமல், விஜய்யில் அந்த விஷயத்தில் யாருக்கு தன்னுடைய சப்போர்ட்- அரவிந்த் சாமி ஓபன் டாக்

சினிமா பிரபலங்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. அந்த காலத்தில் நடிகர்களை ஆதரித்த மக்கள் இப்போது பிரபலங்களை ஆதரிக்கலாமா வேண்டாமா என்ற பெரிய குழப்பத்தில் தான் உள்ளனர்.

அப்படி தமிழ் சினிமா நடிகர்களான ரஜினி, கமல், விஜய் ஆகியோரின் பெயர்கள் தான் அரசியல் பேச்சில் இடம்பெறுகிறது. கமல் வந்துவிட்டார், ரஜினி எப்போது வருவார் தெரியவில்லை, விஜய்க்கு அந்த எண்ணம் உள்ளதா என்பதே தெரியவில்லை.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் நடிகர் அரவிந்த் சாமியிடம், இவர்கள் மூவரில் அரசியலில் உங்களுடைய சப்போர்ட் யாருக்கு என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், இவர்கள் எனக்கு பிடித்தவர்கள் என்பதால் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டு போட மாட்டேன். அவர்கள் செய்து காட்டுவேன் என்று கூறும் விஷயங்கள், அதை செய்து முடிக்கும் திறன் உடையவர்களா என்பதையெல்லாம் யோசித்து தான் ஆதரவு தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.