Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் எப்போது தெரியுமா?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர்.

படத்திற்கான படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகாவை தொடர்ந்து சென்னையில் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. சென்னை படப்பிடிப்பின் எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் படத்தின் 2வது லுக் பற்றிய கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகமாகவுள்ளது. தற்போது வரும் தகவல் என்னவென்றால் படத்தின் இரண்டாவது போஸ்டர் வரும் ஜனவரி 16ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் விஜய்-விஜய் சேதுபதி இடம்பெறுகிறார்கள் என்கின்றனர்.