Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டிவியில் திரையிடப்பட்ட தர்பார்.. கேபிள் டிவி உரிமையாளர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் துறை

சென்ற வாரம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக வந்த படம் தர்பார். இப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இப்படம் மதுரையில் உள்ள திருமங்கலம் சரண்யா சேனலில் ஒளிபரப்பு செய்யபட்டுள்ளது.

இதனை கண்ட தர்பார் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த விஷயத்தை பற்றி புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

மேலும் இதனை குறித்து காவல் துறை உடனடியாக விரைந்து அந்த கேபிள் டிவி உரிமையாளரை கைது செய்துள்ளனர்.